நாட்டில் உருவாகியுள்ள அவசரகால பேரிடர் நிலைமை காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அவசர சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இலங்கை சுற்றுலா அதிகாரசபையை கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற தேசிய பேரிடர் முகாமைத்துவ பேரவையின் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி இது குறித்து சுற்றுலா அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கும் தடையற்ற நிவாரணை உதவிகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.