பெரும்பாலான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வெள்ளம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது அல்லது குறைந்து வருகிறது திருகோணமலை மாவட்டத்தைத் தவிர மற்றும் முக்கிய நீர்ப்பாசனப் பணிகள் சேதமடையாமல் தப்பியுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்தார்.
“எங்கள் நீர்த்தேக்கங்கள் அப்படியே உள்ளன. மழை தீவிரமடைய ஆரம்பித்தபோது அவற்றைப் பாதுகாக்கத் தேவையான அளவு மதகுகளைத் திறந்தோம்” என்று குணசேகர கூறினார்.
“நீர்த்தேக்கங்களால் ஆபத்து எதுவும் இல்லை. மகாவலி ஆற்றில் திருகோணமலையில் வெள்ள மட்டம் அதிகமாக உள்ளது. நாளையும் அது அப்படியே இருக்கும். அதன்பிறகு அது குறையத் தொடங்கும்.”
ஏலஹெர அணையின் 200 மீட்டர் பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது இது எதிர்காலத்தில் பழுதுபார்க்கப்படும்.
“வெள்ள மட்டம் அதிகமாக இருக்கும் திருகோணமலையைத் தவிர தற்போதைய வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வெள்ள மட்டம் அதிகரிக்காது என்று நாம் கூறலாம்” என்று குணசேகர தெரிவித்தார்.

மணிக்கு 90 கிலோமீட்டருக்குக் குறைவான காற்றின் வேகத்தைக் கொண்டிருந்த சூறாவளி இரண்டு நாட்களுக்கு இலங்கையின் மீது நிலைகொண்டிருந்துஅதிக அளவிலான தண்ணீரைத் தீவின் மீது கொட்டியது. இதனால் சில பகுதிகளில் மூன்று நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் துண்டிக்கப்பட்டன.
இது 1978 ஆம் ஆண்டின் அதிக காற்றின் வேகத்துடன் மாலை 6:30 மணியளவில் மட்டக்களப்பில் தரையிறங்கி காலையில் மன்னார் வளைகுடாவுக்குள் சென்ற சூறாவளியுடன் ஒப்பிடுகையில் மாறுபட்டது.
பொலன்னறுவையில் மகாவலி ஆற்றின் ஓட்டத்தால் வெள்ளம் அதிக அளவில் இருந்தது. மின்னேரியா மற்றும் கவுடுள்ள நீர்த்தேக்கங்கள் இன்னும் நிரம்பி வழிகின்றன ஆனால் வெள்ள மட்டங்கள் குறைந்துள்ளன.
களனி ஆற்றில் கடுவெலைக்கு அருகிலுள்ள ஹன்வெல்லாவில் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது மேலும் நாகலகம் வீதியில் நீர்மட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது 6 அங்குலத்திற்கு மேல் உயராது இருப்பினும் முக்கிய வெள்ள மட்டத்திற்கு மேலேயே இருக்கும் என்று அவர் கூறினார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தரவுகள் நாகலகம் வீதியில் களனி ஆற்றின் நீர்மட்டம் மாலை 4:00 மணியுடன் முடிவடைந்த கடந்த இரண்டு மணி நேரமாக 7.5 மீட்டரில் நிலைத்திருப்பதாகக் காட்டுகின்றன. ஹன்வெல்லாவில் நீர்மட்டம் மாலை 4:00 மணியுடன் முடிவடைந்த இரண்டு மணி நேரத்தில் 10.69 இலிருந்து 10.64 ஆகவும்இ பின்னர் 10.60 ஆகவும் குறைந்துள்ளது.
“கம்பஹா நகரத்தில் வெள்ள மட்டம் இந்த அளவிலேயே நீடிக்கும் ஆனால் நாளை காலை முதல் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குணசேகர கூறினார்.
மஹா ஓயாவின் காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய கிரிஉல்ல நகரத்தில் நாளை முதல் நீர்மட்டம் குறையத் தொடங்கும்.
களு ஆற்றில் இரத்தினபுரியில் நீர்மட்டங்கள் குறைந்து வருகின்றன ஆனால் களுத்துறையில் இன்னும் சிறிது காலத்திற்குக் கூடுதல் மட்டத்திலேயே நீர் காணப்படும்.
தெதுரு ஓயாவில் நீர்த்தேக்கம் இப்போது சுமார் 100000 கன அடி நீரை வெளியேற்றுகிறது ஆனால் இது நாளை குறையும். சிலாபம் மருத்துவமனைப் பகுதியில் உள்ள வெள்ளம் நாளை முதல் குறையும்.
மதவத்து ஓயாவில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் அனுராதபுரத்தில் வெள்ள மட்டங்கள் நாளை காலை இந்த அளவிலேயே நீடிக்கும் மற்றும் பிற்பகலில் இருந்து குறையத் தொடங்கும்.
கலா ஓயாவில் வினாடிக்கு 100000 கன அடி நீரை வெளியேற்றிய ராஜங்கனை நீர்த்தேக்கம் இப்போது 60000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகஇஎலுவன்குளம் மற்றும் நோச்சியகம பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
இது இப்போது நிலைநிறுத்தப்பட்டு வருகிறதுமேலும் நாளை முதல் நீர் குறையும் என்று குணசேகர கூறினார்.