இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்
நாட்டு மக்களுக்கான உரையில் இதனை தெரிவித்துள்ள அவர் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய அழிவை சுட்டிக்காட்டி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான அதிகாரிகளின் முயற்சிகள் எவ்வளவு சவாலானவை என்பதை விளக்கியுள்ளார்.
அவசரகால சட்டத்தினை துஸ்பிரயோகம் செய்யமாட்டோம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காகவே அதனை பயன்படுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பேரிடரால் இடம்பெயர்ந்த அனைத்து நபர்களுக்கும் அரசாங்க உதவி கிடைக்கும் என்றும், இந்த தேசிய நெருக்கடியின் போது யாரும் ஆதரவின்றி விடப்படக்கூடாது என்றும் அவர் மேலும் உறுதியளித்தார்.
