உலகின் முதல் 100 இராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் 3 பொதுத் துறை நிறுவனங்களுக்கு இடம்

புதுடெல்லி: இராணுவ தளவாட உற்பத்தியில் உல​கின் முதல் 100 நிறு​வனங்​களின் பட்​டியலில் இந்​தி​யா​வைச் சேர்ந்த 3 பொதுத் துறை நிறு​வனங்​கள் இடம்​பிடித்து அசத்​தி​யுள்​ளன. ஸ்டாக்​ஹோம் சர்​வ​தேச அமைதி ஆராய்ச்சி நிறு​வனம் (சிப்​ரி) வெளி​யிட்ட சமீபத்​திய அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது:

இராணுவ தளவாட உற்​பத்​தி​யில் உலகள​வில் முன்​னணி​யில் உள்ள 100 நிறு​வனங்​களின் பட்​டியலில் இந்​தி​யா​வைச் சேர்ந்த மூன்று பொதுத்​துறை நிறு​வனங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்​துஸ்​தான் ஏரோ​நாட்​டிக்ஸ் (எச்​ஏஎல்), பாரத் எலக்ட்​ரானிக்ஸ் (பிஇஎல்), மசாகன் டாக்ஸ் (எம்​டிஎல்) ஆகிய நிறு​வனங்​கள் அந்​தப் பட்​டியலில் இடம்​பெற்​றிருந்​தா​லும் அதன் விற்​பனை பங்​களிப்பு என்​பது மிக​வும் குறை​வாகவே உள்​ளது. கடந்​தாண்டு நில​வரப்​படி சர்​வ​தேச ஆயுத விற்​பனை​யில் அந்த முன்று நிறு​வனங்​களும் இணைந்து 1.1% பங்​களிப்பை மட்​டுமே வழங்​கி​யுள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


சர்​வ​தேச அளவில் ஆயுத விற்​பனை​ கடந்த 2024-ல் 5.9% அதி​கரித்து சுமார் ரூ.61 லட்​சம் கோடியை எட்​டி​யுள்​ளது. உக்​ரைன், காசா இடையே ஏற்​பட்​டுள்ள மோதல், சர்​வ​தேச மற்​றும் பிராந்​திய அளவி​லான புவி​சார் பதற்​றம் ஆகியவை இராணுவத்​துக்​கான செல​வு​கள் அதி​கரிக்க முக்​கிய காரணங்​களாக அமைந்​துள்​ளன.

முதல் 100 நிறு​வனங்​கள் ஆயுத விற்​பனை பட்​டியலில் 39 நிறு​வனங்​களு​டன் அமெரிக்​காவே ஆதிக்​கம் செலுத்​துகிறது. இவற்​றின் ஆயுத விற்​பனை பங்​களிப்பு 334 பில்​லியன் டாலர். இதைத் தொடர்ந்து சீனா 8 நிறு​வனங்​களு​டன் 88 பில்​லியன் டாலர் விற்​பனையைக் கொண்டு 2-வது இடத்​தில் உள்​ளது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை