பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன் அளிப்பதற்குப் பதிலாக சமூக ஊடகங்களை ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி இன்று குற்றம் சாட்டியது.
ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் சபையில் பேசுகையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இலக்கு வைத்து அவதூறான சமூக ஊடகப் பிரச்சாரங்களைச் ) சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் மேற்கொள்வதாகக் கூறி அவர்களைக் கைது செய்யுமாறு பிரதி அமைச்சர் சுனில் வத்தகல பொலிஸாருக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.
“சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இது அரச பயங்கரவாதம் ஆகும். உங்களது வேதனையைத் தணிப்பதற்காகவா அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையைத் தணிப்பதற்காகவா அவசரகாலச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.