இந்தியாவிற்கு தடையற்ற எரிபொருள்ஏற்றுமதியை” தொடர ரஷ்யா தயாராக உள்ளது-புட்டின்

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இ;ந்திய பிரதமர் பிரதமர் மோடி ஆகியோர் டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு இப்போதுதான் நிறைவடைந்தது. வர்த்தகம் மற்றும் விவசாய உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான திட்டங்களை அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

புடின் வியாழன் அன்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் மோடி அவரை வரவேற்றார் அப்போது இருவரும் அணைத்துக் கொண்டும் கைகுலுக்கியும் தங்களின் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

வெள்ளிக்கிழமை காலையில் இந்திய ஜனாதிபதி மாளிகையில் புடினுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் அவர் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

இந்த இரு தலைவர்களும் உக்ரைன் மற்றும் அமைதி குறித்துப் பேசினர். போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது “அமைதியின் பக்கமே” நிற்கிறது என்றும் மோடி மீண்டும் வலியுறுத்தினார். அதே சமயம் உக்ரைன் மோதலுக்கு “அமைதியான தீர்வை” நோக்கி ரஷ்யா செயல்பட்டு வருவதாக புடின் கூறினார்.

அவர்களது இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு 2030 ஆம் ஆண்டு வரையிலான ஒரு பொருளாதாரத் திட்டத்திற்கு இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தலைவர்கள் அறிக்கைகள் வாசித்தனர்.

பெரிய அளவிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை ஆனால் கப்பல் கட்டுதல் சிவில் அணுசக்தி மற்றும் அத்தியாவசிய கனிமங்களில் முதலீடுகள் ஆகியவை குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அத்துடன் இந்தியாவுக்கு “தடையற்ற” எரிபொருளை வழங்குவதாகவும் ரஷ்யா கூறியது.

சந்திப்பிற்கு சற்று முன்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியமான திட்டத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வாஷிங்டனிடம் இருந்து ஒரு பதிலை மாஸ்கோ எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கிரெம்ளின் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கும் பின்னணியில் புடினின் இந்திய வருகை அமைந்துள்ளது. வியாழன் அன்று உக்ரைன் டோன்பாஸ் பிராந்தியத்திலிருந்து விலக வேண்டும் அல்லது அதை ரஷ்யா கைப்பற்றும் என்று புடின் மீண்டும் எச்சரித்தார்.
இந்தியாவிற்கு எரிபொருளின் “தடையற்ற ஏற்றுமதியை”  தொடர ரஷ்யா தயாராக உள்ளது என்று தெரிவித்தார். மாஸ்கோவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த அமெரிக்காவிடம் இருந்து டெல்லி அழுத்தம் இருந்தபோதிலும் இது நிகழ்கிறது.

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை அமைக்கும் “முக்கியத் திட்டத்திற்கு”  அவர்கள் உதவுவார்கள் என்றும் புடின் குறிப்பிட்டார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை