அரச சேவைக்கு நியமனம் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தாம் அமரும் கதிரைக்குப் பாரமாக இல்லாமல், அந்தக் கதிரைக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்

அரச சேவைக்கு நியமனம் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தாம் அமரும் கதிரைக்குப் பாரமாக இல்லாமல், அந்தக் கதிரைக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 வருமான பரிசோதகர்களுக்கான (Revenue Inspectors) நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, அண்மையில் (01.12.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இயற்கைப் பேரிடர் காரணமாக எளிமையாக நடைபெற்ற, இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

பலர் ஓய்வூதியத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு அரச சேவையை நாடுகின்றனர். ஆனால், இது மக்களுக்குச் சேவை செய்வதற்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒரு பாக்கியமாகும். இச்சந்தர்ப்பத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தங்கள் சொந்தத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களாக நீங்கள் இருக்கக் கூடாது.
உங்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் அனைவரும் உங்கள் உறவினர்களே. அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, நேர்மையாகவும், விரைவாகவும், அன்பாகவும் சேவை செய்ய வேண்டும்.
இன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஒவ்வொன்றும் தங்களது வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அந்த வருமானத்தைத் திரட்டிக் கொடுப்பதில் வருமானப் பரிசோதகர்களான உங்களின் பங்கு அளப்பரியது. நீங்கள் நேர்மையாகச் செயற்பட்டால்தான் சபைகளின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் பணியின் கனதியை உணர்ந்து நீங்கள் செயற்பட வேண்டும்.

நீங்கள் வடக்கு மாகாணத்திற்காகவே தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். எனவே, மாகாணத்தின் எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்றத் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவைப்படும் மேலதிக பயிற்சிகளை வழங்கி உங்களை வழிப்படுத்த மாகாண நிர்வாகம் தயாராக உள்ளது, என்றார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணத்துக்கு 131 வருமானப் பரிசோதகர் ஆளணி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 51 வெற்றிடங்கள் காணப்பட்டன. அதில் 14 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது அனுமதி கிடைக்கப்பெற்றதற்கு அமைவாகவே இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன, எனக் குறிப்பிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்