இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் எந்த வேலைதிட்டத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தயார் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உபஇராஜாங்க செயலாளர் அலைசன் ஹ_க்கர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை இன்று சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் ஜனாதிபதி சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளதாவது
இன்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker உடனான சந்திப்பில் கலந்துகொண்டேன்.
கடந்த அனர்த்த நிலைமையில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் குழுக்களை இந்நாட்டிற்கு அனுப்பி, அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட் மக்களின் விவசாயம், கால்நடைகள், சிறிய மற்றும் மத்திய தர கைத்தொழில்கள் உள்ளிட்ட முக்கிய வருமான வழிகளை மீட்டெடுக்கவும், நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அனைத்து நட்பு நாடுகளின் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தேன்.

இலங்கை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் குறிப்பாக போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker தெரிவித்தார்.