அமெரிக்காவின் ரொடே தீவில் உள்ள பிரவுன் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இல்லாத போதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த மாகாணத்தின் மேயர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிபிரயோகத்தினை மேற்கொண்ட கறுப்புடை அணி;ந்த ஆண் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வருட இறுதி பரீட்சைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிகமோசமான பயங்கரமான சம்பவம் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யமாத்திரம் முடியும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகவும் பழமையான மிகவும் பெருமைவாய்ந்த பல்கலைகழகங்களில் பிரவுன் பல்கலைகழகமும் ஒன்று.