சூறாவளி சேதத்தை மதிப்பிட உலகளாவிய நிபுணர் குழுக்கள் வருகை

சூறாவளியின் ஒட்டுமொத்த தாக்கத்தை மதிப்பிடுவதற்கு உலக வங்கி உள்ளிட்ட பல சர்வதேசக் குழுக்கள் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்  நாட்டின் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் நிதி அமைச்சகம் முக்கியப் பங்கை வகிக்கிறது என்றும் அதே நேரத்தில் இடர் முகாமைத்துவ நிலையம் சேதம் மற்றும் இடர்பாடுகளின் ஒட்டுமொத்த தாக்கத்தை மதிப்பிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

விரைவான மதிப்பீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்றும் உலக வங்கி மற்றும் பல சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அடுத்த கட்ட மதிப்பீடுகளை இடர் முகாமைத்துவ நிலையம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

“இந்த கூட்டு மதிப்பீடுகளின் மூலம் சேதத்தின் அளவு மற்றும் செலவு அடையாளம் காணப்படும் அதன் அடிப்படையில் இடர்பாடுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் திட்டங்கள் வகுக்கப்படும். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம்இ இந்த மதிப்பீடுகளை இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் முடிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

.வரும் வாரத்தில் உலக வங்கியின் குழு ஒன்று இலங்கைக்கு வரும் என்றும் மேலும் பல சர்வதேச அமைப்புகளும் மதிப்பீட்டுச் செயல்பாட்டில் இணையும்

இந்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக உலக வங்கி உட்படப் பல அமைப்புகளுடன் இலங்கை கூட்டுச் சேரும். இது தேசிய மறுசீரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு கூட்டு சர்வதேச முயற்சியாக நடத்தப்படும்.

இதற்கிடையில் சில வெளிநாட்டு நிபுணர் குழுக்கள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளனர். இத்தாலிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் மூலம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. இவர்களின் பணி இடர் முகாமைத்துவ நிலையத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

அந்தக் குழு டிசம்பர் 13 அன்று பேராதனை ரயில்வே பாலத்தைப் பார்வையிட்டதுடன் ஒரு தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் நிபுணர் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் குழு நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் சேதமடைந்த பிற பாலங்கள் மற்றும் சாலை வலையமைப்புகளையும் ஆய்வு செய்யும்.

ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் தலா ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நீரைச் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரக் குழுக்களை அனுப்பியுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத்த மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி