ஒலுமடுக்குளம் உடைப்பெடுத்துள்ளதால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்; விரைந்து சீரமைப்பு வேலைகளை ஆரம்பிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள, ஒலுமடு கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட, ஒலுமடுக்குளம் வெள்ள அனர்த்தம் காரணமாக உடைபெடுத்துள்ளதால் தாம் பாதிப்பை எதிர்நோக்கயுள்ளதாக அதன் கீழ் நெற்பயிற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 17.12.2025இன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் குறித்து ஆராய்ந்துடன், குளத்தின் சீரமைப்பு வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,


குறிப்பாக ஒலுமடுக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் பருவமழை தொடங்கியபிற்பாடு, பொருத்தமற்ற காலப்பகுதியில் ஒப்பந்ததாரர் தொடங்கியதன் காரணமாகவே குறித்த குளம் உடைப்பெடுத்ததாக இதன்போது விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
இதனால் குறித்த குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள 150விவசாயிகளின் 280ஏக்கர் பெரும்போக நெற்செய்கை எதிர்வரும் நாட்களில் நீரின்றி பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

எனவே குறித்த குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும்பொருட்டு, எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழைநீரையாவது குளத்தில் சேகரிக்கும் நோக்குடன், உடைந்துள்ள குளக்கட்டின் பகுதியை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்மெனவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.


இந்நிலையில் குறித்த குளம் வெள்ள அனர்த்தத்தின்போது உடைப்பெடுத்துள்ள நிலையில், நிரந்தரமான சீரமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்குரிய முன்மொழிவுகளை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவப் பிரிவு உரிய தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் விவசாயிகளிடம் தெரியப்படுத்தினார்.
மேலும் குறித்த குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும் நோக்கில், குளக்கட்டினை தற்காலிகமாக சீரமைப்புச் செய்து நீரைச் சேகரிப்பதற்குரிய வேலைகளை முன்னெடுப்பதுதொடர்பில் கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தொலைபேசி அழைப்பெடுத்துப் பேசியிருந்தார்.

இதன்போது கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பதிலளிக்கையில்,
தொடர்மழை பெய்துவருவதால் தற்போது தற்காலிக்சீரமைப்பு வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.
குறிப்பாக குளக்கட்டினை தற்காலிகமாக்சீர்செய்வதற்குரிய உள்ளீடுகளையும், இயந்திரங்களையும் கொண்டுசெல்வதற்கு பாதைப்பிரச்சினை காணப்படுவதாக இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.
எனவே தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் மழையற்ற வானிலை நிலவினால், ஒப்பந்ததாரருடன் தாமும் கலந்துரையாடி விரைவாக குளக்கட்டினை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய ஏற்பாட்டினை தாம் முன்னெடுப்பதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை