வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு குமார் சங்கக்காரவின் உருக்கமான வேண்டுகோள் “இலங்கை பாதுகாப்பானது வாருங்கள்”

கடந்த பல தசாப்தங்களில் நாடு எதிர்கொண்ட மிக மோசமான வெள்ளப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும் எனக் குறிப்பிட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும் எனகிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ செய்தியில் நவம்பர் மாத இறுதியில் தாக்கிய ‘டிட்வா’சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து முன்னாள் அணித் தலைவர் உரையாற்றினார். இந்த சூறாவளி நாடு முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களிலும் 22 இலட்சம் மக்களைப் பாதித்ததோடு பாரிய நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க அல்லது காணாமல் போகக் காரணமானது.

இது குறித்து சங்கக்கார கூறுகையில்:

“இலங்கைக்கு விஜயம் செய்யலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு நான் ஒன்றை உறுதிபடக் கூறுகிறேன்: இலங்கை தற்போது திறந்திருக்கிறது பாதுகாப்பாக இருக்கிறது உங்களை வரவேற்கத் தயாராக இருக்கிறது. நீங்கள் இங்கு வரும்போது உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதோடு எங்கள் நாடு முன்னேறிச் செல்லவும் உதவுகிறீர்கள்.”

நவம்பர் 29 அன்று அரசாங்கம் நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்த போதிலும் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் முழுமையாகச் செயல்படுகின்றன. சிகிரியா மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளன அல்லது ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த சூறாவளியினால் நாட்டின் நிலப்பரப்பில் சுமார் 20மூ நீரால் சூழப்பட்டதுடன் 100000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆரம்பக்கட்ட சேதம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் என பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அந்நியச் செலாவணிக்காக சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்த குளிர்கால சுற்றுலாப் பருவம் மிகவும் முக்கியமானது என இத்துறை சார்ந்த தலைவர்கள் வலியுறுத்தினர்.

“எங்கள் மன உறுதி மாறவில்லை” என்று சங்கக்கார தனது வேண்டுகோளில் தெரிவித்தார். “அந்த மீண்டெழும் பண்பும் அமைதியான வலிமையும்தான் நாங்கள் யார் என்பதைச் சொல்கிறது… நாம் அனைவரும் இணைந்து மீண்டும் கட்டியெழுப்புவோம்.”

டிசம்பர் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் 70000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது சமீபத்திய இயற்கை சீற்றத்தையும் மீறி பயணிகள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்