இயற்கை அனர்த்த பாதிப்பு மற்றும் மீட்சிக்கான பாதை குறித்து மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் விளக்கமளிப்பு

மொஸ்கோவில்  உள்ள இலங்கைத் தூதரகம் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வின் போது அண்மைய இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகள் குறித்தும்இ நிலையான மற்றும் நெகிழ்ச்சியான மீட்சியை நோக்கிய நாட்டின் அர்ப்பணிப்பு குறித்தும் ரஷ்ய அரசாங்க அதிகாரிகள் நட்பு சங்கம் வர்த்தக சபைகள் மற்றும் இலங்கையின் நீண்டகால நண்பர்களுக்கு விளக்கமளித்தது.

இந்த நிகழ்வின் போது ரஷ்ய கூட்டமைப்பு சரியான நேரத்தில் வழங்கிய ஒருமைப்பாடு மற்றும் இலங்கை சமூகங்களுக்கு நீட்டிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்காக தூதுவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கப்டன் தினேஷ் காசாகல தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு முயற்சிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதற்கும் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைப் பாதுகாப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட திட்டம் குறித்த விளக்கக்காட்சியை வழங்கினார்.

இலங்கையின் நீண்டகால மீட்சிக்குத் தொடர்ச்சியான சர்வதேச ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய தூதுவர் மறுகட்டமைப்புஇபொருளாதார மறுமலர்ச்சி மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான பரிமாற்றங்களில் பங்காளிகளாகத் தொடர்ந்து ஈடுபடுமாறு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கை இயல்பு நிலையை மீட்டெடுக்க தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் இருதரப்பு வர்த்தகம் சுற்றுலா மற்றும் முதலீடுகளுக்காக நாடு தொடர்ந்து திறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் வருகையாளர்களிடம் உறுதியளித்தார். இந்த வழிமுறைகளை வலுப்படுத்துவது மீட்சியை விரைவுபடுத்தவும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தவும் உதவும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ரஷ்யா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டுவதற்கும் இந்த நிகழ்வு பயன்படுத்தப்பட்டது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்