பொன்டி தாக்குதல் சந்தேகநபர்கள் – துப்பாக்கி பயிற்சிகளில் ஈடுபட்டனர் பொதுமக்கள் மீது குண்டுகளை வீசினர்- நீதிமன்ற ஆவணத்தில் தகவல்

CNN

பொன்டி பயங்கரவாத சந்தேக நபர்கள் கூட்டத்தின் மீது வெடிக்காத குண்டுகளை வீசினர் மற்றும்துப்பாக்கி தாக்குதலை மேற்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டனர் என்பதைஅவுஸ்திரேலிய நீதிமன்ற ஆவணங்கள்  வெளிப்படுத்தியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தந்தையும் மகனும், கிராமப்புறங்களில் ஒரு ரகசிய இடத்தில் துப்பாக்கி பயிற்சியில்ஈடுபட்டனர் எனநீதிபதி வெளியிட்ட உண்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.

நீதிமன்ற ஆவணத்தின்படி, 50 வயதான சஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் ஆகியோர் துப்பாக்கிகளை ஏந்தியபடி, பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. “குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது தந்தையும் வீடியோ முழுவதும் துப்பாக்கிகளால் சுடுவதையும், தந்திரோபாய முறையில் நகர்வதையும் காண முடிகிறது” என்று அந்த ஆவணம் கூறுகிறது.

டிசம்பர் 14 அன்று பொன்டி கடற்கரையில் (Bondi Beach) ஹனுக்கா கொண்டாடிய யூத குடும்பங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். சஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் பயங்கரவாதக் குற்றம் மற்றும் 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட 40 கொலை முயற்சி வழக்குகளை எதிர்கொள்கிறார்.

தாக்குதலை ஆரம்பிப்பதற்கு  முன்னதாக, இந்த இருவரும்பொதுமக்கள் மீது நான்கு  வெடிகுண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவை எதுவும் வெடிக்கவில்லை. அந்த மூன்று பைப் குண்டுகளும் (pipe bombs) ஒரு டென்னிஸ் பால் குண்டும் வெடிக்கக்கூடிய நிலையில் இருந்ததாக ஆவணம் தெரிவிக்கிறது.

மேலும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பின்புறத்தில் ஐந்தாவது வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவர்கள் “மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாத சித்தாந்தத்தை” பின்பற்றுவதை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் (IS) கொடியின் முன் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், அவர்கள் சியோனிஸ்டுகளின் செயல்களைக் கண்டித்து, இந்த தாக்குதலுக்கான தங்களின் நியாயத்தை விளக்கியுள்ளனர். “குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது தந்தையும் இந்த பயங்கரவாதத் தாக்குதலை பல மாதங்களாக நுணுக்கமாகத் திட்டமிட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்று அந்த ஆவணம் மேலும் கூறுகிறது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்