சூறாவளி– 374,000தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் -சர்வதேச தொழிலாளர் அமைப்பு

நவம்பர் 26 அன்று இலங்கையில் கரையை கடந்த ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி, நாட்டின் பெரும் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய மழையையும் நிலச்சரிவுகளையும் கொண்டு வந்தது. இந்தச் சூறாவளியின் பேரழிவுத் தாக்கம் குறித்த புதிய விவரங்களைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை விளக்குகிறது.

மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் ஏற்பட்டது; அதேசமயம் நிலச்சரிவுகள் பல தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள மத்தியப் பகுதிகளைப் பாரிய அளவில் பாதித்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழலை ஒரு பூர்வாங்கக் கண்ணோட்டத்தில் வழங்க, வெள்ளத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, விவசாயம் மற்றும்  போன்ற தொலைவு உணர்தல் (remote sensing) தரவுகளைத் தொழிலாளர் கணக்கெடுப்புத் தரவுகளுடன் இந்த அறிக்கை ஒருங்கிணைத்துள்ளது.

இந்த நவீன அணுகுமுறை, வாழ்வாதாரங்கள் மீதான சாத்தியமான தாக்கங்கள் குறித்த சரியான நேர நுண்ணறிவுகளை வழங்குவதோடு, அவசரகால நிவாரணம் மற்றும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு சந்தையில் நிலைபெறத் தேவையான இடைக்கால ஆதரவு ஆகிய இரண்டிற்கும் வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 374,000 தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக ILO ஆராய்ச்சி மதிப்பிட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் போனாலோ அல்லது வேறு இடங்களில் தகுந்த வேலைகளைக் கண்டறியத் தவறினாலோ, மாதம் ஒன்றுக்கு 48 மில்லியன் அமெரிக்க டொலர்வருமான இழப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நெல் பயிரிடப்படும் நிலங்களில் 23 சதவீதம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தேயிலைத் துறையின் உற்பத்தி இழப்பு 35 சதவீதம் வரை அதிகமாக இருக்கக்கூடும் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தேயிலைத் துறையில் 70 சதவீத உற்பத்தியைப் பங்களிக்கும் சிறுதோட்ட விவசாயிகள் இச்சூழ்நிலையால் விகிதாசாரத்திற்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசமான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

குறுகிய காலத்தில், அவசரக்கால பண உதவி மற்றும் கண்ணியமான பணிச்சூழலை உறுதிப்படுத்தும் வேலைவாய்ப்பு-தீவிர மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதோடு குறிப்பிட்ட துறைசார் ஆதரவு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) தங்களது உற்பத்திச் சாதனங்களை விரைவாக மீட்டெடுக்க உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய திட்டங்கள் மிகவும் நலிந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், மோதல்-தவிர்ப்பு உணர்வுடனும் (conflict-sensitive), தொழிலாளர் மற்றும் முதலாளித்துவ அமைப்புகள் ஊடாகவும் சமூகப் பங்காளிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டும் செயல்பட வேண்டும். நடுத்தர கால மீட்பு முயற்சிகள், ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, வேலைவாயப்புக் கொள்கைகள் மற்றும் பேரிடர் அபாய மேலாண்மை கட்டமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பையும் பரப்பளவையும் மேம்படுத்த, இந்த நிகழ்விலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?