சுனாமி- 2004 ஆம் ஆண்டின் நிழல்களிலிருந்து இன்றைய மீள்தன்மை வரை

இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்றதொரு காலைப் பொழுதில், இலங்கையின்நாட்காட்டிஅப்படியே உறைந்து போனது. எமக்கு வாழ்வாதாரத்தையும் அழகையும் வழங்கிய அந்தப் பெருங்கடல், எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத பேரழிவின் சக்தியாக மாறியது. இன்று, அந்த நாட்களை நினைவுகூறுவது வெறும் ஆண்டுகளை எண்ணுவதற்காக மட்டுமல்ல; வீழ்ந்துவிட மறுத்து நிமிர்ந்து நின்ற ஒரு தேசத்தின் மன உறுதியை கௌரவிப்பதற்காகவுமே ஆகும்.

2004 சுனாமியை நாம் திரும்பிப் பார்க்கும்போது, அது ஒரு சாதாரண அனர்த்தம் மட்டுமல்ல என்பதை உணர்கிறோம்; அது எமது நாட்டின் வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு “பாதிப்பின் வரைபடம்” (blueprint of trauma) ஆகும். மௌனமாக இருப்பதன் ஆபத்தையும், விழிப்புணர்வுடன் இருப்பதன் அவசியத்தையும் அது எமக்குக் கற்றுத்தந்தது.

கடலோரங்களில் நாம் இழந்தவர்களை நினைவு கூரும் அதே வேளையில், இன்று பதுளை மலைப் பகுதிகளிலும், வடக்கின் சமவெளிப் பகுதிகளிலும் நாம் இழந்து வரும் மக்களையும் நாம் நினைவுகூர வேண்டும். இன்று கந்தகெட்டியவில் மண்ணைத் தோண்டித் தேடும் அந்த தாய் அனுபவிக்கும் அதே ஆழமான துயரத்தைத்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு காலி கடலோரத்தில்முல்லைத்தீவு கடற்கரையில்நின்ற தாயும் அனுபவித்தாள். அனர்த்தத்தின் புவியியல் மாறியிருக்கலாம் — கடலின் அலைகளிலிருந்து நிலச்சரிவுகளாக அது மாறியிருக்கலாம் — ஆனால் மனித உயிரிழப்பின் வலி அப்படியேதான் இருக்கிறது.

2004 முதல் இன்று வரையான எமது பயணம் வளர்ச்சியையும், சில நேரங்களில் தவறவிட்ட வாய்ப்புகளையும் கொண்டதாக அமைந்திருக்கிறது. நாம் எச்சரிக்கை கோபுரங்களையும் சைரன்களையும் கட்டியெழுப்பிய போதிலும், முழுமையான மீட்சிக்குத் தேவையான “நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பை” (Institutional bridges) உருவாக்குவதில் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறோம்.

ILO போன்ற சர்வதேச அமைப்புகளின் தற்போதைய மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுவது போல, காலநிலை மாற்றங்கள் இப்போது எமது வீடுகளை மட்டுமல்ல, எமது நாட்டின் பொருளாதார இருப்பையே அச்சுறுத்துகின்றன. 2004 இல் எம்மைக் காப்பாற்றிய அந்நியர்களின் தற்காலிக உதவிகளை மட்டுமே நாம் இனிமேலும் நம்பியிருக்க முடியாது; நாம் முறையான பொறுப்புக்கூறலையும், அறிவியல் ரீதியான ஒருங்கிணைப்பையும் கோர வேண்டும்.

சுனாமியில் மடிந்தவர்களுக்கும், அண்மைய ‘டிட்வா’ சூறாவளியில் நாம் இழந்தவர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய உண்மையான கைம்மாறு, வெறும் “உயிர் பிழைத்திருப்பதையும்” தாண்டி முன்னேறுவதாகும். உண்மையான நினைவு கூர்தல் என்பது ஒரு நிமிட மௌன அஞ்சலியில் மட்டும் இல்லை; அது பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகளில் உள்ளது. ஆபத்தை வரைபடமாக்கும் புவியியலாளரிடமும், விவசாயிக்குக் கடன் கிடைப்பதை உறுதி செய்யும் அதிகாரியிடமும், எச்சரிக்கையைப் பின்பற்றும் குடிமகனிடமும் தான் அந்த நினைவு கூர்தல் அடங்கியிருக்கிறது.

இன்று, நாம் உயிருடன் இருப்பவர்களைப் பாதுகாப்பதன் மூலம், மறைந்தவர்களின் நினைவுகளைக் கௌரவிக்கிறோம். போர், ஆழிப்பேரலை மற்றும் இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி நிலைத்து நிற்கும் இலங்கையர்களின் மன உறுதியை நாம் போற்றுகிறோம்.

இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களும் நித்திய சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். “இனி ஒருபோதும் இத்தகைய அழிவு ஏற்படாது” என்பது வெறும் நம்பிக்கையாக மட்டும் இல்லாமல், அது ஒரு நிஜமாக மாறும் இலங்கையை உருவாக்குவதற்கு இறைவன் நம் அனைவருக்கும் ஞானத்தை வழங்கட்டும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்