தேசிய மக்கள் சக்திஅரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை


 இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (Bribery Commission), தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

‘ஊழல் மற்றும் வீணடிப்புக்கு எதிரான குடிமக்கள் சக்தி’ (Citizens’ Power against Corruption and Waste) அமைப்பின் தலைவர் ஜமுனி காமந்த துஷார சமர்ப்பித்த முறையான புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 16 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அந்தப் புகாரில், ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டிருந்தது.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர்கள்:

  1. டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ: சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் ஆளும் தரப்பு முதற்கோலாளர்.

  2. பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் சபை முதல்வர்.

  3. வசந்த சமரசிங்க: வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்.

  4. குமார ஜயகொடி: எரிசக்தி அமைச்சர்.

  5. சுனில் ஹந்துன்னெட்டி: தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர்.

  6. சுனில் வதகல: பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் (சட்டத்தரணி).

ஆணைக்குழுவின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு இது தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியுள்ள நிலையில், மேலதிக விளக்கங்களை வழங்கவும் வாக்குமூலம் அளிக்கவும் புகார்தாரர் இன்று  ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

குறிப்பாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது ஏற்கனவே 2015-ல் உரக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் புகார் குறித்து ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்