‘டிட்வா’ (Ditwah) சூறாவளியின் தாக்கத்தினால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்புக்கு சுமார் 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, பல மருத்துவமனைகள் உட்பட எட்டு சுகாதார நிறுவனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவை மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மொத்த சேதம் 4.1 பில்லியன் அமெரிக்கடொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
“உலகளாவிய அனுபவங்களின்படி, உலக வங்கியால் செய்யப்படும் ஆரம்பகட்ட மதிப்பீடானது, விரிவான மதிப்பீட்டின் போது சுமார் 10% மட்டுமே மாற்றமடையும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்