இஸ்ரேலுக்கு மேலும் தொழிலாளர்களை அனுப்ப இலங்கை தீர்மானம்

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மேலும் தொழிலாளர்களை அனுப்புவதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படவுள்ளது. சர்வதேச சட்டங்களின் கீழ் சட்டவிரோதமான குடியேற்றங்களை உருவாக்கி வருவதாகவும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து வருவதாகவும் சர்வதேச அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு இவ்வாறு பணியாளர்களை அனுப்ப இலங்கை முன்வந்துள்ளது.

இது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியதாவது:

“இஸ்ரேலில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் இலங்கைப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசு உத்தியோகபூர்வமாக விருப்பம் தெரிவித்துள்ளது.”

இதற்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் புரோட்டோகால் ‘ஜி’ என்ற புதிய சரத்தின் கீழ் பணியாளர்களை அனுப்ப வெளிநாட்டு அலுவல்கள்இ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கு முன்னைய ஒப்பந்தங்கள்:
ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின்படி பின்வரும் துறைகளில் தற்காலிக வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்:

வீட்டுப் பராமரிப்பு மற்றும் விவசாயம்

கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறை

ஹோட்டல் மற்றும் உணவு வழங்கல் (ஊயவநசiபெ)

துப்புரவுப் பணிகள்

பின்னணி:
அக்டோபர் 7 2023 இற்குப் பிறகு பாலஸ்தீனியர்களுக்கான வேலைவாய்ப்புகளைபணி இஸ்ரேல் தடை செய்ததாலும் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளதாலும் இஸ்ரேல் தற்போது கடும் தொழிலாளர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது.

அரசியல் விமர்சனம்:
இந்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்தார். “யுத்தக் குற்றங்களை இழைத்து வரும் ஒரு நாட்டிற்கு எமது பணியாளர்களை அனுப்புவது என்பது ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது தொழிலாளர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய நாசி ஜெர்மனிக்கு பணியாளர்களை அனுப்புவதற்குச் சமமானது” என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.