சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாகஇலங்கையை யுஎஸ்ஏ டுடே தெரிவு செய்துள்ளது.இந்தத் தரவரிசையானது, பல மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளிடம் நடத்தப்பட்ட ‘G Adventures’ Happiness List 2026‘ ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இலங்கையின் தெற்கு கடற்கரையோரம் அமையும் ஏழு நாள் பாய்மரக் கப்பல் பயணம் (Sailing Experience), அமைதியான கடற்கரைகள், மீன்பிடி கிராமங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்காகப் பாராட்டப்பட்டது.
கலாச்சாரம், இயற்கை மற்றும் ஓய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய நிதானமான மற்றும் அர்த்தமுள்ள பயணங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஐஸ்லாந்து (Iceland), குவாத்தமாலா (Guatemala) மற்றும் பனாமா (Panama) போன்ற நாடுகளுடன் இணைந்து இலங்கையும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு மனநிறைவான மற்றும் உண்மையான சுற்றுலாத் தலம் என்ற இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
