ரணிலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்வதா? சட்டமா அதிபர் திணைக்களத்தில் மாறுபட்ட கருத்துக்கள்

லண்டன் பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகளின் அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா அல்லது ஆதாரங்கள் போதுமானதாக இல்லையா என்பது குறித்து இந்த மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.

இந்த விசாரணை தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக விசாரணையை மேற்பார்வையிட்டு வந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் (DSG) வசந்த பெரேரா அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரியவருகின்றது

. இதே வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீதான விசாரணையை முன்னெடுத்து வந்த வசந்த பெரேரா, ரணில் விக்கிரமசிங்க அல்லது வேறு எவருக்கும் எதிராகக் குற்றம் சுமத்துவதற்குப் போதுமான ஆதாரங்கள் விசாரணையில் வெளிவரவில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

திரு. விக்கிரமசிங்கவிற்கு எதிரான முதன்மைக் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், அதே குற்றத்திற்குத் துணை நின்றதாக திரு. ஏக்கநாயக்க மீது குற்றம் சுமத்த வாய்ப்பில்லை என்று வசந்த பெரேரா கருத்துத் தெரிவித்துள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் மற்றும் விசாரணைப் பதிவுகளின் அடிப்படையில் திரு. விக்கிரமசிங்க அல்லது வேறு எவருக்கும் எதிராக ஏன் குற்றவியல் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர முடியாது என்பதை விளக்கி சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம் அவர் ஆறு பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இருப்பினும், விசாரணையின் தலைமை மேற்பார்வை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ASG) திலீப பீரிஸ், வசந்த பெரேராவின் கருத்துக்கு மாறான கருத்தைச் சமர்ப்பித்துள்ளார். கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ய முடியும் என்று அவர் சட்டமா அதிபரிடம் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையை மேற்கொள்ளும் சிஐடி அதிகாரிகளும் திலீப பீரிஸின் கருத்தை ஆதரித்துள்ளனர்.

இருப்பினும், வசந்த பெரேரா தனது அறிக்கையில், கியூபாவிலிருந்து நியூயார்க் சென்று அங்கிருந்து இலங்கை வரும்போது லண்டன் ஊடாக வருவது திரு. விக்கிரமசிங்கவிற்குப் புதிய ஒன்றல்ல என்றும், வொல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்புக் கடிதம் கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் அவர் லண்டனில் தங்கியிருக்க வேண்டிய நிலை இருந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திரு. விக்கிரமசிங்கவின் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வொல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதம் உண்மையானதா என்பதை ஆராய, பிரித்தானிய அதிகாரிகளிடமிருந்து ‘குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவிச் சட்டத்தின்’ (MLA) கீழ் முறையான சட்ட உதவியைப் பெறாமல் சிஐடி குழு லண்டன் சென்றது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். சட்ட ரீதியான உதவியைப் பெறத் தவறியதால், லண்டன் சென்ற சிஐடி குழுவினால் இந்த அழைப்புக் கடிதம் தொடர்பாக வாக்குமூலம் எதனையும் பெற முடியாமல் போனதாக வசந்த பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தனது மாற்றுக் கருத்துடன் சேர்த்து, சமன் ஏக்கநாயக்க மீதான விசாரணைப் பதிவுகளை ஆய்வு செய்து அரச சட்டத்தரணி சமதரி பியசேன தயாரித்த 11 பக்க அறிக்கையையும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரைக் கைது செய்யப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லண்டன் சென்ற சிஐடி குழுவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியும், அதற்கு சிஐடி இன்னும் பதிலளிக்கவில்லை என்று தெரியவருகிறது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்