இலங்கையின் தெற்குக் கடற்கரையே அலைச்சறுக்கு விளையாட்டிற்குச் சிறந்தது: அமெரிக்கத் தூதர் ஜூலிசங் புகழாரம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றி வெளியேறவுள்ள ஜூலி சங், நாட்டின் தெற்குக் கடற்கரைப் பகுதியே –  அலைச்சறுக்கு -விளையாட்டிற்குச் சிறந்த இடமெனத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஒரு சுற்றுலாப் பயணியாக மீண்டும் இலங்கைக்கு வர விரும்புவதாகத் தெரிவித்த அவர், தனது அனுபவத்தை ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளார்:

“நான் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண்ணாக இருந்தபோதிலும், இதற்கு முன்பு சர்பிங் செய்ய முயற்சித்ததே இல்லை. ஆனால், இலங்கையில் ஒரு பொறுமையான ஆசிரியரின் உதவியுடன் எனது பயத்தை வென்று, இறுதியாக சர்பிங் போர்டில் ஏறினேன். மீண்டும் ஒரு சுற்றுலாப் பயணியாக வந்து அதிக பாடங்களைக் கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்! இலங்கையின் தெற்குக் கடற்கரை தான் சிறந்தது,”

என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இப்பகுதியின் அழகிய கடற்கரை மற்றும் அலைச்சறுக்குக்கு ஏற்ற சூழலையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை