உதவிவந்துகொண்டிருக்கின்றது என ஈரானில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) பதிவிட்டுள்ளதாவது:
“ஈரானிய தேசப்பற்றாளர்களே, தொடர்ந்து போராடுங்கள் – உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்!!! கொலையாளிகள் மற்றும் அத்துமீறுபவர்களின் பெயர்களைச் சேமித்து வையுங்கள். அவர்கள் இதற்காகப் பெரிய விலையைச் செலுத்த நேரிடும்.
போராட்டக்காரர்களின் அர்த்தமற்ற கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்து கொண்டிருக்கிறது (HELP IS ON ITS WAY).”
இந்தச் செய்தி, ஈரானுடனான வர்த்தகத் தொடர்புகள் காரணமாக இலங்கையின் ஏற்றுமதிக்கு அவர் விதித்துள்ள 25 சதவீத வரி மிரட்டலுடன் இணைந்து, பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.