சூறாவளிக்கு பிந்தைய புனரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்குஇதுவரை 8.5 பில்லியன் ரூபா வெளிநாட்டு உதவி

சூறாவளிக்கு பிந்தைய புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு சுமார் 8.5 பில்லியன் ரூபா  வெளிநாட்டு நிதி உதவி கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை  தெரிவித்தார்.

மொத்தம் 47 நாடுகள் இந்த உதவித் திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ளன. இதில் 1 பில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கிய அமெரிக்கா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் உள்ளன.

“புனரமைப்பு பணிகள் தொடங்கியது முதல், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நலம் விரும்பிகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைத்து வரும் பேராதரவு எங்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது,” என்று திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு கிடைத்த இந்த 8.5 பில்லியன் ரூபா நிதியில் 9.49 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களும் உள்ளடங்கியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் 640-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், பயிர்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த நிதி உதவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வர்த்தகங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும், புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக சூரியப்பெரும குறிப்பிட்டார்.

மேலும், 21.3 பில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இலங்கை சுங்கத்திற்கு வந்துள்ளதாகவும், அவை சுங்கத் தீர்வின்றி விடுவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 45 பில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதி கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 4.5 பில்லியன் ரூபா பெறுமதியான 24,000 கோரிக்கைகள் இதுவரை தீர்க்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையின் மீட்சிப் பணிகளுக்காக இந்தியா 450 மில்லியன்டொலர் உதவிப் பொதியை அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட இந்த பொதியில், 350 மில்லியன் டொலர் சலுகை கடன் திட்டங்களும், 100 மில்லியன்டொலர் மானியங்களும் அடங்கும்.

தவிர, சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சிலாபம் பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்தைப் புனரமைக்க ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அவசர உதவிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் அங்கு மகப்பேறு மற்றும் சிசு பராமரிப்புக்கான சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பேரழிவினால் 6,228 வீடுகள் முழுமையாகவும், 1,01,055 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது 723 தங்குமிடங்களில் 22,096 குடும்பங்களைச் சேர்ந்த 66,132 பேர் தங்கியுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்