கிளிநொச்சியில் 1 கோடி 40 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள், 181 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வழங்கிவைப்பு!

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் நோக்கில், 181 பயனாளிகளுக்கான சுயதொழில் உற்பத்தி உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி மாவட்டத் திறன்விருத்தி மண்டபத்தில் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
​கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 181 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு, ரூபா 14,624,400.00 பெறுமதியான சுயதொழில் ஊக்குவிப்புப் பொருட்கள், சிங்கப்பூரைச் சேர்ந்த திரு. திருமதி துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசியா இராமன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டன.
​தமிழர் தாயகத்தில் 1000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் இந்த செயற்திட்டத்தை மேனாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், மேனாள் யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவருமான திரு ஜெயசேகரம் அவர்களின் முயற்சியாலேயே முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனர் வேதநாயம் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
​இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சி.சிறீதரன் அவர்கள், “சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கினாலும், தாயகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த எம்முடன் கரம்கோர்த்தமைக்கு அனைத்து உறவுகள் சார்பிலும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகக்” குறிப்பிட்டார்.
​தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “போரின் பின்னரான வடக்கு, கிழக்கில் ஏறக்குறைய 90,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. அவர்களின் வாழ்வியலை முன்னேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் எம் அனைவருக்கும் உரியது. புலம்பெயர்ந்த உறவுகள் அனைவரும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு