கொழும்பிலுள்ள சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) அண்மையில் நடத்திய ஆய்வில், டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அதிக திருப்தி கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பின் முக்கிய முடிவுகள்:
-
தலைமைத்துவம்: செயற்பாடுகள் குறித்து 80 வீதமான மக்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர் அதேவேளை ஆளும்கட்சி எதிர்கட்சி அரசியல்வாதிகள் குறித்து மக்கள் மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகின்றது- ஆளும் கட்சி அரசியல்வாதிகள் குறித்து கருத்துகணிப்பில் கலந்துகொண்டவர்களில் 46 வீதமானவர்களும் எதிர்கட்சி அரசியல்வாதிகள் குறித்து 24 வீதத்திற்கு குறைவானவர்களும் மாத்திரம் திருப்;தி வெளியிட்டுள்ளனர்.
-
அரசின் செயல்பாடுகள்: மீட்புப் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதில் 70% பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை மற்றும் வெளியேற்றும் பணிகளில் 52% மட்டுமே திருப்தி நிலவுகிறது.
-
முதற்பதிலளிப்பாளர்கள்: இராணுவம், பொலிஸ் மற்றும் தன்னார்வலர்களின் பணிகளுக்கு 80% பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குறைகள்:
-
முகாம்களில் தங்கியிருந்தவர்களில் 30% பேருக்கு மருத்துவச் சிகிச்சையும், 47% பேருக்கு உளவியல் ஆலோசனைகளும் கிடைக்கவில்லை.
-
58% பேர் சேதமடைந்த ஆவணங்களை மீண்டும் பெறுவதில் உதவி கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
பாதிப்பை அதிகரித்த காரணிகள்: மக்கள் கருத்தின்படி, அபாயகரமான இடங்களில் குடியிருப்புகள் அமைந்திருப்பது மற்றும் பலவீனமான வடிகால் அமைப்புகளே சூறாவளி பாதிப்பு அதிகமாகக் காரணமாக அமைந்தன