டிட்வா சூறாவளி: சர்வதேசநன்கொடையாளர் மாநாடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை – நிதி அமைச்சின் வழிகாட்டலுக்காகக் காத்திருப்பு

முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச நன்கொடையாளர் மாநாடு தொடர்பாக தாம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சிடமிருந்து உத்தியோகபூர்வ வழிகாட்டல்கள் கிடைக்கும் வரை காத்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 அமைச்சின் அதிகாரி ஒருவர், அத்தகைய முயற்சி குறித்து இதுவரை அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று கூறினார். “நன்கொடையாளர் மாநாடு நடத்தப்பட வேண்டுமானால், வெளிவிவகார அமைச்சு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது குறித்த உத்தியோகபூர்வ தகவல் கிடைக்காததால் அத்தகைய முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதும், அந்தச் செயல்முறைக்கு ஆதரவளிக்க நாம் தயாராக உள்ளோம்,” என்றார்.

டிட்வா சூறாவளியின் பின்னர் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிதி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த முன்மொழியப்பட்ட மாநாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்