நிதி முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்-கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் சமூக ஊடகப் பதிவுகளைக் குறைக்கிறது

அமெரிக்க அரசாங்கம் நிதிமுடக்கத்தை எதிர்கொள்வதன் காரணமாகவாஷிங்டனில்  அமெரிக்க மத்திய  பணிகள் பகுதியளவில் முடக்கப்பட்டுள்ளதை (Partial Shutdown) அடுத்து, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது வழக்கமான தொடர்பாடல்களைத் தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசாங்கத்தின் இயல்பு நிலை திரும்பும் வரை பேஸ்புக் பதிவுகள் அத்தியாவசிய பாதுகாப்புச் செய்திகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அவசரமற்ற பதிவுகள் மற்றும் வழக்கமான தகவல்கள் இந்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்படும்.

நிதியில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், அமெரிக்காவிற்குள்ளும் கொழும்பு உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரகங்களிலும் கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் வழமை போன்று தொடரும் எனத் தூதரகம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. தூதரக சேவைகள் மற்றும் அலுவலக நேரங்கள் குறித்த மேலதிக விபரங்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அமெரிக்க காங்கிரஸினால் (US Congress) மத்திய நிதி ஒதுக்கீடுகளை உரிய நேரத்தில் அங்கீகரிக்க முடியாதபோது இவ்வாறான நிதி முடக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அத்தியாவசியமற்ற சில அரசாங்க நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன. இந்த நிதி நெருக்கடி உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பாதித்துள்ளதால், ஏனைய பல நாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களும் இவ்வாறான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்