வடமாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளில் யாழ் ஐடி ஹப்பின் புதிய பயணங்கள் 2026

வடமாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளில் யாழ் ஐடிஹப்(IT HUB) புதிய பயணங்கள் 2026 என்ற தி;ட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் யாழ் ஐடிஹப் தெரிவித்துள்ளதாவது
வட மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளில் எமது “புதிய பயணங்கள் 2026” (Puthiya Payanangal) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது . புதியபயணங்கள் 2026 இற்கான அறிமுகம் மாணவர்களுக்கு வழங்கும்போது எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே காணலாம். 📸✨
6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க எமது குழுவினர் நேரடியாக பாடசாலைகளுக்குச் சென்று, இந்த நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
👨‍👩‍👧 பெற்றோர்களுக்கான வேண்டுகோள்:
உங்கள் பிள்ளைகள் 6, 7, 8 அல்லது 9 ஆம் வகுப்புகளில் படிக்கிறார்களா? மொபைல் போனில் வெறும் வீடியோக்கள் பார்ப்பதோடு நின்றுவிடாமல், அறிவை வளர்க்கும் முகமாக தாமே ஆராய்ந்து செயற்படுத்திப் பார்க்கும் எமது கேமிஃபைட் (Gamified) இணைய செயலியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
📢🔗 இப்போதே பரீட்சித்துப் பாருங்கள்: https://app.yarlithub.org/puthiya-payanangal/
🌍 சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள்:
எமது மாகாணத்தின் ஒவ்வொரு மாணவ மாணவியும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். தயவுசெய்து இந்தப் பதிவை உங்கள் ஊர் முகநூல் குழுக்கள் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்களில் பகிர்ந்து, 6-9 தர மாணவர்களுக்கு இந்த அரிய வாய்ப்புச் சென்றடைய உதவுங்கள். 📢
👨‍🏫 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வேண்டுகோள்:
உங்கள் பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லையா? பாடப்புத்தக அறிவைத் தாண்டி, மாணவர்களின் புத்தாக்க சிந்தனையையும் தொழில்நுட்பத் திறனையும் தூண்ட எமது குழுவினரை உங்கள் பாடசாலைக்கு அழைக்கலாம். 📍 எம்மைத் தொடர்பு கொள்ள:
யாழ்ப்பாணம் : 0773540842
கிளிநொச்சி : 0770408802
மன்னார் : 0773546193
வவுனியா : 0773546905
முல்லைத்தீவு : 0773542397
ஏன் இந்தத் திட்டம் முக்கியமானது?
Science, Technology, Engineering, Arts, மற்றும் Mathematics (STEAM) பாடங்களை விளையாட்டு மூலம் மிக எளிதாகக் கற்கலாம்.
இது மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனையை (Innovation) வளர்க்கிறது.
முற்றிலும் இலவசமாக எமது இணைய செயலி மூலம் எங்கிருந்தும் கற்க முடியும்.
ஒன்றிணைந்து நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை தொழில்நுட்ப அறிவால் வலுப்படுத்துவோம்! ✨
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்