வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 2025 ஆம் ஆண்டில் 8.076 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டி, இதுவரை இல்லாத அளவிலான புதிய சாதனையைப் படைத்துள்ளது –  தலைப்புச் செய்திகளுக்குப் பின்னால்மறைந்திருக்கும் உண்மைகள்

 2026 பெப்ரவரி 6

கட்டுரையாளர்: கலாநிதி பைலேஷா வீரரத்ன (ஆய்வாளர் மற்றும் தலைவர், இடம்பெயர்வு மற்றும் நகரமயமாக்கல் கொள்கை ஆய்வு, இலங்கை கொள்கை ஆய்வு நிறுவனம் – IPS)

இலங்கைக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 2025 ஆம் ஆண்டில் 8.076 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டி, இதுவரை இல்லாத அளவிலான புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2024 இல் பெறப்பட்ட 6.6 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த 22.8% வளர்ச்சியானது அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து தொழிலாளர்கள் அதிகளவில் வெளியேறியதன் விளைவாக ஏற்பட்டுள்ளது.

நாட்டின் செலுத்து நிலுவையில் (Balance of Payments) நிலவும் அழுத்தத்தைக் குறைப்பதில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டாலும், அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும் தியாகங்களும் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இலங்கை கொள்கை ஆய்வு நிறுவனம் (IPS) மேற்கொண்ட இரண்டு அண்மைக்கால ஆய்வுகளின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த வலைப்பதிவு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

புலம்பெயர் இடங்களும் பணப்பரிமாற்றத்தின் தோற்றமும்

பணப்பரிமாற்றம் அதிகமாக வரும் நாடுகள், இலங்கைத் தொழிலாளர்கள் அதிகமாகச் செல்லும் நாடுகளுடன் ஒத்துப்போகின்றன. 2025 ஆம் ஆண்டிலும் இலங்கைத் தொழிலாளர்களின் முதன்மை இடமாக மத்திய கிழக்கு பிராந்தியமே தொடர்ந்தது. இதில் குவைத் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

அதேபோல், இலங்கைக்கு வரும் பணப்பரிமாற்றத்தின் பெரும் பகுதி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களிடமிருந்தே அனுப்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான தரவுகளின்படி, குவைத் (10.7%), ஐக்கிய அரபு இராச்சியம் (10.4%) மற்றும் சவூதி அரேபியா (9.4%) ஆகிய நாடுகளிலிருந்தே அதிகளவான பணம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நாடுகளின் பங்கு அண்மைக்காலமாக தேக்கமடைந்துள்ளது அல்லது குறைந்து வருகிறது. மாறாக, அதிகத் திறன் கொண்ட மற்றும் நீண்டகாலம் தங்கியிருக்கும் தொழிலாளர்களை ஈர்க்கும் நாடுகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. உதாரணமாக, பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வரும் பணப்பரிமாற்றம் 2022 இன் நான்காம் காலாண்டிற்கும் 2025 இன் மூன்றாம் காலாண்டிற்கும் இடையில் இரட்டிப்பாகியுள்ளது; அதே நேரத்தில் குவைத், கட்டார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் பங்கு குறைந்துள்ளது.

எனவே, பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அண்மைக்காலமாக அதிகத் திறன் கொண்ட தொழிலாளர்கள் வெளியேறுவதும், அவர்களின் அதிக வருமானம் மூலம் அதிக பணத்தை அனுப்பும் திறனும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அந்நியச் செலாவணி விகிதங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்துள்ளதால் முறையான வழிகளில் பணம் அனுப்பப்படுவது அதிகரித்துள்ளதும், நெருக்கடிக்கு பிந்தைய பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதும் பிற காரணங்களாகும்.

பின்னால் விடப்பட்ட குடும்பங்கள் மீதான தாக்கம்

அதிக வருமானம் மற்றும் புலம்பெயர்வினால் ஏற்படும் சாதகமான தாக்கங்கள் ஒருபுறமிருக்க, தாயகத்தில் தங்கியிருக்கும் குடும்பங்கள் புலம்பெயர்வின் எதார்த்தங்களைச் சமாளிக்க பெரும் தியாகங்களைச் செய்கின்றன. IPS பங்களிப்பு செய்த ஆய்வு ஒன்று, சர்வதேசப் புலம்பெயர்வின் மூலம் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகளுக்கும், குழந்தையின் வளர்ச்சிக்குத் தாயின் இருப்பு தரும் நன்மைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் சுமார் 9% குடும்பங்கள் வெளிநாட்டிலிருந்து பணப்பரிமாற்றத்தைப் பெறுகின்றன. எனினும், குடும்பப் பின்னணி அறிக்கை (FBR) கட்டுப்பாட்டின் காரணமாகத் தாய்மார்கள் வீட்டில் இருப்பது, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் சிறந்த விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டினால் தாய்மார்கள் வீட்டில் இருக்கும் போது, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நோய்த்தாக்கத்தினால் வெளிநோயாளிப் பிரிவிற்குச் செல்லும் நிலை 14 சதவீதத்தாலும், தங்கி சிகிச்சை பெறும் நிலை 15.2 சதவீதத்தாலும் குறைகிறது.

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்குத் தாயின் இருப்பே முக்கிய காரணம் என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது. மேலும், முதிய பிள்ளைகளிடையே, தாய் வீட்டில் இருப்பது மாணவர்கள் ஒரு வகுப்பில் தோல்வியடைவதை அல்லது அதே வகுப்பில் மீண்டும் கல்வி கற்பதை 60% வரை குறைக்கிறது. எனவே, பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குச் செல்வதும் அதன் மூலம் கிடைக்கும் பணப்பரிமாற்றமும், அவர்களின் பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி சார்ந்த மனித மூலதன வளர்ச்சியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வெளிநாடுகளில் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்

வருமான உயர்வு, திறன் மேம்பாடு மற்றும் மேம்பட்ட தொழில் வாய்ப்புகள் போன்ற சாதகமான அம்சங்களுக்கு மத்தியில், புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பப் பிரிப்பு, கடன் சுமை, மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் மற்றும் சுரண்டல்களுக்கும் ஆளாகின்றனர். பெண் தொழிலாளர்களை இத்தகைய சுரண்டல்களிலிருந்து பாதுகாப்பதற்கே FBR கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

2024 ஆம் ஆண்டில் புலம்பெயர் தொழிலாளர்களால் 7,448 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக IPS ஆய்வு காட்டுகிறது. இதில் 41% சவூதி அரேபியாவிலிருந்தும், 34% குவைத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இப்புகார்களில் 76% மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண் வீட்டுப் பணியாளர்களால் அளிக்கப்பட்டவை.

கடும் நிதி நெருக்கடி மற்றும் குடும்பக் கடன்கள் காரணமாகவே பல பெண்கள் வெளிநாடு செல்கின்றனர். இந்த பொருளாதாரத் தங்கியிருப்பு நிலை அவர்களைச் சுரண்டல்களுக்கு ஆளாக்குகிறது. வேலை இழப்பு அல்லது வருமான இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் அவர்கள் துஷ்பிரயோகங்களை வெளியே சொல்லத் தயங்குகின்றனர். சில தொழிலாளர்கள் ஊதியம் வழங்கப்படாத நிலையிலும், தமக்கு வரவேண்டிய நிலுவைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தொடர்ந்து துஷ்பிரயோகங்களைச் சகித்துக் கொண்டு பணிபுரிகின்றனர்.

கொள்கைப் பரிந்துரைகள்

பணப்பரிமாற்றத்தின் சாதனையைப் பாராட்டும் அதேவேளை, தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறைப்பது அவசியமாகும். பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க “முன்னெச்சரிக்கை ஆதரவு கட்டமைப்பிற்கு” (Pre-emptive support structure) மாறுவது அவசியம். தற்போது ஒரு பாதிப்பு ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, ஒரு தொழிலாளி வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே அவரைத் தொடர்புகொண்டு அவரது பணி மற்றும் வாழ்க்கைச் சூழலை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்காலப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அல்லது தூதரகங்கள் மூலம் தொலைபேசி அல்லது சமூக ஊடக ஆய்வுகள் வாயிலாக இதனை நடைமுறைப்படுத்தலாம். இத்தகைய பாதுகாப்பான நடைமுறைகள், பணப்பரிமாற்றத்தின் நன்மைகளை உறுதிப்படுத்தும் அதேவேளை, தொழிலாளர்களின் தியாகங்களைக் குறைக்க உதவும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்