2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 253,293 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததன் மூலம், இலங்கை தனது சுற்றுலாத்துறை வரலாற்றில் பெப்ரவரி மாதத்திற்கான அதிகபட்ச வருகையைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பதிவான 240,217 வருகைகளே சாதனையாக இருந்தது. அதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 235,618 வருகைகள் பதிவாகியிருந்தன. தற்போது அந்த சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்த வலுவான முன்னேற்றத்தைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு அனைத்து முந்தைய பெப்ரவரி சாதனைகளையும் கடந்து சென்றுள்ளது. 2026 பெப்ரவரி 25 ஆம் திகதியாகும் போது, இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 530,000 ஐத் தாண்டியுள்ளது.
பெப்ரவரி மாத வருகை ஒப்பீடு:
| ஆண்டு | சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை |
| 2026 | 253,293 (புதிய சாதனை) |
| 2025 | 240,217 |
| 2018 | 235,618 |
