ஓமனின் முசந்தம் (Musandam) கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் எண்ணெய் டாங்கர் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதில் நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் 20 பேர் கொண்ட முழு குழுவினரும் வெளியேற்றப்பட்டனர். ‘ஸ்கைலைட்’ (Skylight) என்று பெயரிடப்பட்ட அந்த கப்பல், மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள சிறிய தீவு நாடான பாலாவ் (Palau) நாட்டின் கொடியுடன் பயணித்தது. ஓமானிய கடற்படை மற்றும் ராணுவம் மீட்புப் பணிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட கடல்சார் பாதுகாப்பு மையம், இது ‘கடல்சார் சம்பவங்களைக் கையாள்வதில் நாட்டின் தயார்நிலையைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறியது.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் ஓமன் முக்கிய பங்கினை வகித்தது குறிப்பிடத்தக்கது.
