ஈரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைச்சகம் (Centcom) தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட “ஆபரேஷன் எபிக் பியூரி” (Operation Epic Fury) நடவடிக்கையின் தொடக்கத்தில், அமெரிக்கப் படைகள் ஈரானின் ஜமரன்-வகை (Jamaran-class) சிறிய ரக போர்க்கப்பலைத் (Corvette) தாக்கியதாக சென்காம் தனது ‘X’ சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
“அந்தக் கப்பல் தற்போது ஓமன் வளைகுடாவில் உள்ள சா பஹார் (Chah Bahar) துறைமுகத்தின் ஒரு பாலத்திற்கு அருகே கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது,” என்று சென்காம் மேலும் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பைப் போலவே, ஈரானிய ஆயுதப் படைகள் மற்றும் புரட்சிகர காவல்படையினர் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, “கப்பலை விட்டு வெளியேறுமாறு” (Abandon ship) சென்காம் வலியுறுத்தியுள்ளது.
