BBC
இந்தியப் பெருங்கடலில், “சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஒரு ஈரானிய போர்க்கப்பலை” அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ஹெக்செத் (Hegseth) தெரிவித்துள்ளார்.
“அதற்குப் பதிலாக, அது ஒரு டார்பிடோ (நீர்மூழ்கித் தாக்குதல் ஏவுகணை) மூலம் மூழ்கடிக்கப்பட்டது,” என்று அவர் .தெரிவித்துள்ளார்.
தாக்கப்பட்ட ஈரானிய கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை. இருப்பினும், முன்னதாக இலங்கை கடற்படை அளித்த தகவலின்படி, IRIS Dena என்ற ஈரானிய கப்பல் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும், அதிலிருந்த சுமார் 140 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலைப் பாராட்டிய ஹெக்செத் (Hegseth), இந்தப் போரில் அவர்களின் பங்களிப்பு “ஈடு இணையற்ற திறன் மற்றும் இரும்பு போன்ற உறுதியுடன்” நிறைவேற்றப்படுவதாகக் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு ஆற்றல்மிக்க ஒரு கூட்டாளியுடன் இணைந்துப் போரிடுவது ஒரு “புத்துணர்ச்சி அளிக்கும் அனுபவம்” (breath of fresh air) என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் “அமெரிக்காவே முதன்மை” (America First) என்ற கொள்கையின் அடிப்படையில் எடுக்கும் “துணிச்சலான நடவடிக்கை” இது