ஈரானிய வங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
“தங்கள் தோல்வியுற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பயங்கரவாத அமெரிக்க ராணுவமும் கொடூரமான சீயோனிச ஆட்சியும் (இஸ்ரேல்) நாட்டின் ஒரு வங்கியைக் குறிவைத்துள்ளன,” என்று இஸ்லாமியக் குடியரசின் மத்திய ராணுவத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் சொல்ஃபகாரி கூறியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர் மேலும் கூறுகையில், “எதிரியின் இந்த சட்டவிரோத மற்றும் வழக்கத்திற்கு மாறான செயலானது, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் சீயோனிச ஆட்சியுடன் தொடர்புடைய பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளைக் குறிவைக்க எங்களை நிர்ப்பந்திக்கிறது,” என்றார்.
பிராந்தியத்தில் உள்ள வங்கிகளில் இருந்து மக்கள் குறைந்தது ஒரு கிலோமீட்டர் அல்லது அரை மைல் தொலைவில் இருக்குமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.