இலங்கைக் கடற்பரப்பில் உயிரிழந்த ஈரான் மாலுமிகளின் உடல்கள் இன்று ஈரானுக்குத் அனுப்பி வைப்பு

காலி: இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்ட ‘IRIS Dena’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் இன்று ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளன.

அதிகாரிகளின் தகவல்படி, காலி தேசிய வைத்தியசாலையின் பிரத்யேக குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 45 மாலுமிகளின் உடல்கள், இன்று அதிகாலை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அவை விசேட விமானம் மூலம் ஈரானுக்கு ஏற்றிச் செல்லப்படவுள்ளன. எஞ்சியுள்ள ஏனைய மாலுமிகளின் உடல்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் தற்போது துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மார்ச் 11-ஆம் திகதி காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட வழங்கிய நீதித்துறை உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு அவர் வழங்கிய பணிப்புரையைத் தொடர்ந்து, இன்றைய தினம் உடல்கள் விமானம் மூலம் தாயகம் கொண்டு செல்லப்படுகின்றன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்