புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு  குறித்து வெளிவிவகார அமைச்சர் ஆய்வு

  • தூதரகத் தலைவர்களுடன் கலந்துரையாடல்.
  • மோதல் தீவிரமடைந்தால் அவசரகால திட்டமிடல்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து ஆய்வு செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், சவுதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கான இலங்கை தூதுவர்களையும் தூதரகத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

மத்திய கிழக்கிலுள்ள முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை ஒருங்கிணைத்து, தொழிலாளர்களின் நிலைமை, வேலைவாய்ப்புகள், அவசரகாலத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுப் பணம் அனுப்பும் வரவு (remittance) ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 8 முதல் 9 சதவீத பங்கைக் கொண்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், ஆண்டுக்கு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர், அவர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர்.

மோதல்களினால் இலங்கையர்கள் எவருக்கேனும் ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மூவரும் கட்டாரில் இருவரும் என மொத்தம் ஐந்து இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும், பெரும்பாலான தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர்.

“அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வேலை ஒப்பந்தங்களை அவர்கள் பின்பற்றுவதால், அங்கேயே தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளனர். அந்த நாட்டு அரசாங்கங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விசா நீட்டிப்புகளையும் வழங்கியுள்ளன,” என்று அவர் கூறினார். நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களைப் பதிவு செய்து வருவதாகவும், விமான சேவைகள் வழமைக்குத் திரும்பியதும் அவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு