தீப்பற்றி எரிகிறது, மக்கள் ஓடுகிறார்கள்: இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்  பிபிசி 

நாங்கள் டெல் அவிவ் நகரின் எல்லைப்பகுதியில் இருந்தபோது, சரியாக நாங்கள் காரில் உள்ளே நுழையும் வேளையில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின.

எங்களுக்கு முன்னால் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்க்க முடிகிறது; ஒரு சில கார்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன, தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, மேலும் இங்குள்ள மக்களிடையே ஒருவித பீதி நிலவுகிறது.

தங்களுக்குத் தெரிந்தவர்கள் எவருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய ஏராளமான மக்கள் அந்தப் பகுதியை நோக்கி ஓடி வருகிறார்கள். இது மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஒரு குடியிருப்புப் பகுதியாகும்.

ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன, ஆனால் சில ஏவுகணைகள் தப்பித்து உள்ளே வருகின்றன.

இந்த ஏவுகணைகளில் சில வானத்திலேயே உடைந்து ‘கிளஸ்டர் பாம்’ (cluster bombs) எனப்படும் சிறிய குண்டுகளாக மாறுகின்றன. இவை கீழே விழும்போது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இவை உயிருக்கு ஆபத்தானவை.

A satellite image shows planes at Prince Sultan Air Base in Saudi Arabia February 21, 2026

சவுதி அரேபியாவின் தலைநகருக்கு அருகிலுள்ள அல்-கர்ஜ் (Al-Kharj) பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் (PSAB), ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விமானப்படை தளம் ஏராளமான அமெரிக்கப் போர் விமானங்களின் தளமாக விளங்குகிறது. ரியாத் மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் குறைந்தது 10 ட்ரோன்களை தாங்கள் இடைமறித்து அழித்துள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம், இந்தத் தளத்தின் மீது தாங்கள் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.