ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையின் சிதறல்கள் (Shrapnel), இஸ்ரேலில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் தங்கியிருந்த ஒரு கட்டிடத்தை சேதப்படுத்தியதாக இஸ்ரேலின் ‘சேனல் 12’ (Channel 12) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடம் (parking area) போன்ற ஒரு பகுதியின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை ‘சேனல் 12’ ஒரு புகைப்படம் மூலம் காண்பித்தது. இருப்பினும், அந்தக் கட்டிடம் எங்குள்ளது என்ற விவரத்தை அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிடவில்லை. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் ஜெருசலேமில் உள்ளது; மேலும் முன்பு தூதரகமாகச் செயல்பட்ட ஒரு முக்கிய கிளை அலுவலகம் டெல் அவிவ் (Tel Aviv) நகரிலும் உள்ளது.
இது குறித்த மேலதிக கருத்துகளைப் பெறுவதற்காக சிஎன்என் (CNN) அமெரிக்க வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டுள்ளது.
