யேமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சிக் குழு, இஸ்ரேலை நோக்கி இரண்டாவது ஏவுகணையை வீசியுள்ளதாக CNN மற்றும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் (Times of Israel) ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஆதரவு பெற்ற இந்தக் குழு, இஸ்ரேல் மீது ஏவிய குரூஸ் (Cruise) ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே இஸ்ரேலிய வான்பரப்பிற்குள் ஒரு பாலிஸ்டிக் (Ballistic) ஏவுகணையை அக்குழு ஏவியிருந்தது.
தவிர, தெற்கு இஸ்ரேலில் உள்ள ஈலாட் (Eilat) நகரின் மீது ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 மற்றும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ட்ரோன்யேமனி லிருந்து அனுப்பப்பட்டதாக அவை கூறுகின்றன.
முன்னதாக, ஈரான், லெபனான், ஈராக் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் இலக்கு வைத்ததற்குப் பதிலடியாக, “முக்கியமான இஸ்ரேலிய இராணுவத் தளங்களைக் குறிவைத்து” பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். ஏமனிலிருந்து வந்த ஏவுகணையைத் தாம் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது
