அமெரிக்க ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஈரானுடனான மோதல் காரணமாக உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ்
நீரிணை தொடர்ந்து முடங்கிக் கிடப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% அதிகரித்து ஒரு பீப்பாய் 105.38 டொலராக உயர்ந்துள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான எரிசக்தி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இப்பாதை வழியாகவே நடைபெறுகிறது. பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்தத் தடையால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ட்ரம்ப்பின் உரையில் இப்பாதையைத் திறப்பது குறித்த தெளிவான சமிக்ஞைகள் இல்லாதது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
