BBC
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் படங்களில் உள்ள சிதைந்த பாகங்கள், அமெரிக்காவின் F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானத்தைச் சேர்ந்தவை என்பதை ஒரு நிபுணர் உறுதிப்படுத்தியுள்ளதாக ‘பிபிசி வெரிஃபை’ (BBC Verify) தெரிவித்துள்ளது.
இராணுவ அறிவியல் ஆய்வுக் குழுவான ‘ரூசி’ (Rusi think tank)-இன் மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் (Justin Bronk) கூற்றுப்படி, படங்களில் காட்டப்பட்டுள்ள பாகங்கள் பிரித்தானியாவின் ஆர்.ஏ.எப் லேகன்ஹீத் (RAF Lakenheath) தளத்தைச் சேர்ந்த அமெரிக்காவின் 494-வது போர் விமானப்படைப் பிரிவின் (494th Fighter Squadron) விமானத்தின் இறக்கை முனை (wingtip) மற்றும் செங்குத்து நிலைப்படுத்தி (vertical stabiliser) ஆகும்.
தலைகீழ் படத் தேடல் (Reverse image search) முடிவுகளின்படி, இந்தப் படங்கள் இன்று முதல் தான் சமூக ஊடகங்களில் பகிரப்படத் தொடங்கியுள்ளன.
இந்தப் படங்கள் மிக நெருக்கமான கோணத்தில் எடுக்கப்பட்டிருப்பதாலும், புவிஇருப்பிடத்தைக் கண்டறியும் (geolocate) தெளிவான அடையாளங்கள் இல்லாததாலும், இவை எங்கு எடுக்கப்பட்டன என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், இந்தப் படங்களை ஏஐ (AI) மூலம் ஆய்வு செய்ததில், அவை மாற்றியமைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
