ஈரானுக்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியை தேடி மீட்டெடுக்கும் பணியில் (Search-and-rescue mission) ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஏ-10 வார்த்ஹாக் (A-10 Warthog) விமானம், தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்ததாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸ் (CBS News) ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
அந்த வார்த்ஹாக் விமானத்தின் விமானி பாராசூட் மூலம் பாரசீக வளைகுடாவில் (Persian Gulf) குதித்த நிலையில், அவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.