ஈரானில் காணாமல் போன அமெரிக்கப் போர் விமானக் குழு உறுப்பினரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க விமானப்படையின் சிறப்புப் போர் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவினர் (Combat Search and Rescue units) ‘பிளாக்ஹாக்’ (Blackhawk) ஹெலிகாப்டர்கள் மூலம் அந்தப் பகுதியைச் சல்லடை போட்டுத் தேடுவார்கள் என்று அமெரிக்க விமானப்படையின் முன்னாள் பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ் (Pararescue Jumpers) தளபதி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ் நியூஸிடம் (CBS News) பேசிய அவர், ஹெலிகாப்டர்கள் செல்ல முடியாத பகுதிகளில் மீட்பு இலக்கு இருந்தால், ஏசி-130 (AC-130) கன்ஷிப் விமானங்களிலிருந்து பாராரெஸ்க்யூ வீரர்கள் குதித்து, கால்நடையாகத் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் என்று கூறினார்.
தரைப்பகுதிக்குச் சென்றடைந்ததும், காணாமல் போன விமானியைத் தொடர்புகொள்வது, தேவைப்பட்டால் மருத்துவ உதவி வழங்குவது, எதிரிகளிடம் சிக்காமல் தப்பிப்பது அல்லது அவர்களைத் தடுத்து நிறுத்தி, பாதுகாப்பாக வெளியேறக்கூடிய இடத்திற்கு விமானியை அழைத்துச் செல்வது ஆகியவையே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.
இவர்களின் பணி “மிகவும் ஆபத்தானது மற்றும் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது” என்று விவரித்த தளபதி, இந்த வீரர்கள் பல்துறைத் திறமை கொண்டவர்கள் என்பதால் இவர்களை “விமானப்படையின் சுவிஸ் ஆர்மி கத்திகள்” என்று அழைப்பதாகக் குறிப்பிட்டார்