அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இஸ்ரேலிய இராணுவம் இன்று காலை தெற்கு லெபனானில் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், இன்று காலை நாட்டின் தெற்கே உள்ள டயர் (Tyre) மற்றும் நபடியே (Nabatieh) பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுடனான மோதலுக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.
லெபனான் அரசாங்கம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிடமிருந்து இது குறித்த உத்தியோகபூர்வ கருத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். எனினும், இந்த ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான், இந்த உடன்படிக்கையில் லெபனானும் உள்ளடங்கும் என்றே குறிப்பிட்டிருந்தது.
எந்தவொரு ஒப்பந்தத்திலும் லெபனான் முனையையும் சேர்க்குமாறு ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானிடம் கேட்டுக் கொண்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதற்கிடையில், லெபனான் எல்லைக்குள் ஒரு “பாதுகாப்பு இடையக வலயத்தை” (Security buffer zone) உருவாக்கப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய துருப்புக்கள் லெபனானுக்குள் ஊடுருவியுள்ள நிலையில், இது நாட்டின் சில பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.