ட்ரம்ப் போர்நிறுத்தம் அமுலில் இருப்பதாகக் கூறினாலும், தீவிரமடைந்துள்ள மோதல்

:BBC

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நான்கு வாரங்களாக நீடித்து வரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை (Truce) மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் வகையில் இந்த மோதல் வெடித்துள்ளது. இருப்பினும், முதலில் தாக்குதலைத் தொடங்கியது யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பென்டகன் (Pentagon) தரப்பில் கூறுகையில், வளைகுடா பகுதியிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேறிக் கொண்டிருந்த அமெரிக்கக் கடற்படையின் அழிப்புக் கப்பல்கள் மீது, ஈரானிய ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் “தூண்டப்படாத” தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கட்டளை மையங்கள் உள்ளிட்ட இராணுவ இலக்குகளை அமெரிக்கா தாக்கியுள்ளது. கெஷ்ம் தீவு மற்றும் பண்டார் அப்பாஸ் துறைமுக நகரங்களில் நிலப்பரப்பில் வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரான் வெளியிட்ட செய்திகளுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

மறுபுறம், ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை கூறுகையில், ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல் மற்றும் மற்றொரு கப்பல் மீது அமெரிக்கர்கள் நடத்திய “ஆக்கிரமிப்பு” காரணமாகவே இந்த மோதல் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பதிலடியாகவே அமெரிக்கக் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு மட்டுப்படுத்தப்பட்டதாக்குதல்  (Limited exchange of fire) என்றும், இது மீண்டும் போர் தொடங்குவதைக் குறிக்காது என்றும் அமெரிக்க அதிகாரிகள் உணர்த்த முயல்கின்றனர். ஆனால், தெஹ்ரான் இதனை அமெரிக்கர்களால் செய்யப்பட்ட போர்நிறுத்த மீறலாகவே வர்ணிக்கிறது.

ஹோர்முஸ் நீரிணையை பலவந்தமாகத் திறப்பதற்காக ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுத்த (தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள) இராணுவ நடவடிக்கைக்குப் பழிவாங்கும் வகையில், இந்த வார தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. அதற்கு அமெரிக்கா போதுமான அளவு ஆக்ரோஷமாகப் பதிலளிக்கவில்லை எனச் சில வளைகுடா அரபு நாடுகள் கருதிய நிலையில், தற்போதைய இந்த புதிய மோதல் வெடித்துள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்