கடலில் 36 நாட்கள் தத்தளித்த இலங்கைத் தந்தை, மகன் வங்காளதேசத்தில் மீட்பு

படகு இயந்திரக் கோளாறு காரணமாக 36 நாட்கள் கடலில் தத்தளித்த இலங்கைத் தந்தை மற்றும் மகன் வங்காளதேசக் கரைக்கு அப்பால் மீட்கப்பட்டுள்ளதாக வங்காளதேசத்தின் ‘ப்ரொதோம் அலோ’ (Prothom Alo) செய்தி வெளியிட்டுள்ளது.

தேவினுவரையைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது மகன் சௌந்த ஹன்னடிகியாவேட்டிங் (Saunda Hannadigipiyawating) என அடையாளம் காணப்பட்ட இந்த மீனவர்கள், வெள்ளிக்கிழமை கொக்ஸ் பாஜார் (Cox’s Bazar) பகுதியில் உள்ள மகேஷ்காலிக்கு அப்பால் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.

ப்ரொதோம் அலோ செய்தியின்படி, அவர்கள் கடலுக்குச் சென்று ஏழு நாட்களிலேயே உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. இதனால் அடுத்த 29 நாட்களுக்கு அவர்கள் தூண்டில் இரைகள் மற்றும் கடலில் பிடித்த பச்சை மீன்களைச் சாப்பிட்டே உயிர் பிழைத்துள்ளனர்.

ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து நான்கு மீனவர்கள் கடலுக்குப் புறப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக படகின் இயந்திரம் பழுதடைந்ததையடுத்து, இரண்டு மீனவர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு மற்றொரு படகின் உதவியுடன் இலங்கைக்கரைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. படகு தங்களுடையது என்பதால் தந்தையும் மகனும் படகிலேயே தங்கியிருந்துள்ளனர்.

ஏழு அல்லது எட்டு நாட்களுக்குப் பிறகு, மியான்மரைச் சேர்ந்த சிலர் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் ஏறி, தொலைநோக்கி (binoculars) மற்றும் கேமரா உள்ளிட்ட பல மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் சென்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வங்காளதேச மீனவர்கள் அந்தப் படகைக் கண்டு, அதற்குள் இருவரையும் கண்டுள்ளனர். அதில் ஒருவர் மோசமான உடல்நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் மீட்ட மீனவர்கள், பழுதடைந்த படகைக் கரைக்கு இழுத்துச் சென்றனர்.

அதிகாரிகள் தேவையான சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தந்தையும் மகனும் மகேஷ்காலி பொலிஸாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ப்ரொதோம் அலோ தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இரு இலங்கையர்களும் விரைவில் தாயகம் திரும்புவதற்கு உதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு