டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel And Tour World – TTW) அமைப்பின், 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் ‘சிறந்த 50 கடற்கரை சுற்றுலாத் தலங்கள்’ தரவரிசையில் இலங்கை 20 ஆம் இடத்தைப் பிடித்து உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. தங்க நிற மணற்பரப்பு கொண்ட கடற்கரைகள், உலகப் புகழ்பெற்ற அலைச்சறுக்கு (surfing) மையங்கள், வளமான கடல்சார் உயிரினங்கள் மற்றும் கரையோர பாரம்பரியம் ஆகியவற்றின் காரணமாக இலங்கை இந்த முன்னணிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
முழுமையான செய்தி இதோ:
‘டிராவல் அண்ட் டூர்… வேர்ல்ட்’ (TTW) நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் ‘சிறந்த 50 கடற்கரை சுற்றுலாத் தலங்கள்’ பற்றிய விரிவான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. உலகளாவிய விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியல், இயற்கை அழகு, கடற்கரைகளின் பன்முகத்தன்மை, சுற்றுலாப் பயணிகளின் அனுபவம், நிலையான சுற்றுலா முறைமை, கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பு, அணுகல் வசதி, சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார ஈர்ப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நாடுகளை அங்கீகரிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான இத்தரவரிசையில் கிரீஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஸ்பெயின், துருக்கியே (Türkiye), அமெரிக்கா, இத்தாலி மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட கடற்கரைகளை மதிப்பீடு செய்து இத்தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
“உலகின் மிகச் சிறந்த கடற்கரை தலங்கள் என்பவை, மூச்சடைக்கச் செய்யும் அழகிய கடற்கரைகளுடன் துடிப்பான கலாச்சாரம், செழிப்பான கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பு, விதிவிலக்கான விருந்தோம்பல் மற்றும் பொறுப்பான சுற்றுலா முறைமை ஆகியவற்றை தடையின்றி ஒன்றிணைப்பவையாகும். இன்றைய சுற்றுலாப் பயணிகள் வெறும் அழகான காட்சிகளை மட்டும் விரும்புவதில்லை; இயற்கையையும் உள்ளூர் சமூகங்களையும் மதிக்கும் அதே வேளையில், தங்களுக்குள் நீங்கா நினைவுகளை உருவாக்கும் அர்த்தமுள்ள அனுபவங்களையே எதிர்பார்க்கிறார்கள்.
இந்தச் சுற்றுலாத் தலங்கள் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதிலும், வாழ்வாதாரங்களை ஆதரிப்பதிலும், உணர்திறன் மிக்க கரையோர சூழலைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. TTW-ன் 2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த 50 கடற்கரை சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சுற்றுலா வளர்ச்சியையும் எவ்வாறு வெற்றிகரமாக சமநிலைப் படுத்தலாம் என்பதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கின்றன” என்று டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான அனுப் குமார் கேஷன் தெரிவித்துள்ளார்.
உலகின் சிறந்த 50 கடற்கரை சுற்றுலாத் தலங்கள்

-
இலங்கை —
தங்க நிற மணற்பரப்பு, உலகத் தரம் வாய்ந்த அலைச்சறுக்கு மையங்கள் மற்றும் வளமான கரையோர பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள இலங்கை, இந்தியப் பெருங்கடலின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட கடற்கரை தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இலங்கையின் சிறந்த 10 கடற்கரைகள்:
-
உனவடுன கடற்கரை (Unawatuna Beach) – அமைதியான அலைகள், பவளப்பாறைகள்
-
மிரிஸ்ஸ கடற்கரை (Mirissa Beach) – திமிங்கிலம் பார்த்தல், அலைச்சறுக்கு
-
ஹிரிகெட்டிய கடற்கரை (Hiriketiya Beach) – குதிரை லாப வடிவிலான வளைகுடா, அலைச்சறுக்கு
-
அறுகம்பை (Arugam Bay) – உலகத் தரம் வாய்ந்த அலைச்சறுக்கு, அமைதியான சூழல்
-
பெந்தோட்டை கடற்கரை (Bentota Beach) – நீர் விளையாட்டுக்கள், காயல்
-
நிலாவெளி கடற்கரை (Nilaveli Beach) – வெண்மணல் பரப்பு, தெளிவான நீர்
-
உப்புகெளி கடற்கரை (Uppuveli Beach) – ஆழ்கடல் மூழ்கல் (diving), அமைதியான சூழல்
-
கோயாம்பொக்க கடற்கரை, தங்காலை (Goyambokka Beach, Tangalle) – பனை மரங்கள் சூழப்பட்ட தனிமையான கடற்கரை
-
பாசிக்குடா கடற்கரை (Pasikuda Beach) – ஆழமற்ற நீர்நிலை, குடும்பத்துடன் செல்ல ஏற்றது
-
தளவல்ல கடற்கரை (Dalawella Beach) – பனைமர ஊஞ்சல்கள், பாதுகாப்பான காயல் பரப்பு