தரமற்ற நிலக்கரி தொடர்பான ஆய்வக அறிக்கைகளை மாற்ற  அழுத்தம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி தொடர்பான ஆய்வக அறிக்கைகளை மாற்றுவதற்கு வெளிப்புற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை நிலக்கரி உற்பத்தி தனியார் நிறுவனத்தின் (Lanka Coal Generation Private Limited) பணிப்பாளர் சபையின் உறுப்பினரான சாலிய பண்டிதரத்ன ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே இந்த வெளிப்படுத்தலைச் செய்தார்.

உட்புறக் கலந்தரையாடல்களை ரகசியமாகப் பதிவுசெய்தல் மற்றும் அந்தப் பதிவுகளை நிலக்கரி விநியோக நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் உட்பட பல சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் ஆணைக்குழுவிற்குத் தெரிவித்தார்.

நிலக்கரி ஏற்றி வந்த கப்பல்கள் இலங்கையை வந்தடைந்த பின்னரும் கூட, சில அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே தெளிவற்ற பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற வேளையில், சில கப்பல்கள் நீண்ட காலத்திற்கு நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் பண்டிதரத்ன மேலும் வெளிப்படுத்தினார்.

தரமற்ற நிலக்கரி சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட சர்வதேச விநியோகஸ்தர்களோ அல்லது அவர்களின் உள்ளூர் பிரதிநிதிகளோ எரிசக்தி அமைச்சின் செயலாளரால் அழைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், 2022 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரி கொள்முதல் நடைமுறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தேசிய தணிக்கை அலுவலகமும் ஆணைக்குழுவிடம் கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பித்துள்ளது.

ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த தணிக்கை கண்காணிப்பாளர் கே. எம். சுமுது தில்ஹானி, அரசாங்க நிதியியல் குழுவின் (COPF) கோரிக்கைக்கு அமைவாக நடத்தப்பட்ட தணிக்கையின்படி, 2023 முதல் 2025 வரையிலான நிலக்கரி இறக்குமதிகள் முறையான ஏலக் கோரல் நடைமுறையைப் பின்பற்றாமல், கோரப்படாத முன்மொழிவு (unsolicited proposals) முறைகளின் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

கோரப்படாத முன்மொழிவுகளை நம்பியிருப்பது கணிசமான ஆபத்துக்களை உருவாக்கியதுடன், நாட்டைப் பாதகமான நிலைக்குத் தள்ளியதாகவும் அவர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார். 2022 பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நிலக்கரி கொள்முதல் நடைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்