இலங்கையின் செயற்கை நுண்ணறிவு சிறப்பை கௌரவிக்கும் ‘தேசிய AI விருதுகள் 2026’ க்கான விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை செயற்கை நுண்ணறிவு வாரத்தின் (Sri Lanka AI Week) முதன்மை அங்கமான ‘தேசிய AI விருதுகள் 2026’ (National AI Awards 2026 – ‘AI Amplified’) க்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக விரைவாக உருவெடுத்து வருவதுடன், உள்ளூர் தொழில்துறைகள் மற்றும் சமூகங்களின் திறனைப் புரட்சிகரமாக உயர்த்தி வருகிறது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy), எஸ்.எல்.டி-மொபிட்டெல் (SLT-MOBITEL) நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கும் இத்தேசிய AI விருதுகள் விழா, இலங்கை AI வாரத்தின் மிக முக்கிய அம்சமாக அமையும். இது AI இன் எதிர்காலத்தை வடிவமைக்கும் தலைவர்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் ஒன்று சேர்க்கிறது.

2026 ஒக்டோபர் 04 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த விருது வழங்கும் விழா, கைத்தொழில், கல்வித்துறை, ஸ்டார்ட்அப் (startups) நிறுவனங்கள் மற்றும் அரச துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவுத் துறையிலான சிறந்த உள்ளூர் சாதனைகளை வெளிப்படுத்தும். மேலும், இந்த விருதுகள் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதுடன், AI தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதிலும் அதன் சிறப்பிலும் தேசிய தரநிலைகளை கௌரவிக்கும்.

தேசிய AI விருதுகள், தொழில்துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி, புதிய சாத்தியங்களை வரையறுத்து, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொலைநோக்குச் சிந்தனையாளர்கள், குழுக்கள் மற்றும் யோசனைகளைக் கொண்டாடி கௌரவிக்கவுள்ளது.

இவ்விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன:

  • தேசிய AI முன்னோடி விருதுகள் (National AI Trailblazer Awards)

  • துறைசார் சிறப்பு விருதுகள் (Industry & Sector Excellence Awards)

  • கண்டுபிடிப்பு மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட விருதுகள் (Innovation & Future-Focused Awards)

  • ஆண்டின் சிறந்த AI உள்ளடக்க உருவாக்குநர்கள் (AI Content Creators of the Year)

AI துறையில் உயர்மட்ட தாக்கம் மற்றும் தலைமையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய விருதுகளில் பின்வருவன அடங்கும்:

  • தேசிய AI சிறப்பு விருது (National AI Excellence Award)

  • தேசிய AI தலைமைத்துவ சிறப்பு விருது (National AI Leadership Excellence Award)

  • தேசிய AI தாக்கச் சிறப்பு விருது (National AI Impact Excellence Award)

  • தேசிய AI ஏற்றுமதிச் சிறப்பு விருது (National AI Export Excellence Award)

முக்கிய துறைகளில் AI மாற்றத்தைக் கொண்டாடும் வகையில் வழங்கப்படும் கைத்தொழில் கண்டுபிடிப்பு விருதுகள் (Industry Innovation Awards) பின்வரும் துறைகளில் AI இன் முன்னோடி பயன்பாடுகளை அங்கீகரிக்கும்:

  • விவசாயம் (Agriculture)

  • உற்பத்தி மற்றும் தொழிற்துறை 5.0 (Manufacturing & Industry 5.0)

  • வங்கி, நிதி மற்றும் காப்பீடு (Banking, Finance & Insurance)

  • கல்வி (Education)

  • சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல்கள் (Healthcare & Life Sciences)

  • ஊடகம் (Media)

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.aiexpo.lk/ai-awards என்ற இணையதள முகவரியின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, இலங்கையின் AI பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2026 ஆகஸ்ட் 15 ஆகும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்